×

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

சேலம், மே.22: சேலம் பச்சப்பட்டி ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(45). எலக்ட்ரீசியன். இவர் நேற்று இரவு 9 மணியளவில் அருகில் அவரது அண்ணன் முருகேசன் வீட்டில் எலக்ரிக் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் மீது மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Selvaraj ,Salem Pachapatti Arumugam ,Murugesan ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...