×

ராஜீவ்காந்தி நினைவு தினம்

இளம்பிள்ளை, மே 22: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சேலம் அடுத்த சித்தர்கோயில் மலை அடிவாரத்தில் உள்ள காந்தி சிலை அருகே, ராஜீவ் காந்தியின் படத்திற்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், நகர தலைவர் சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜமுத்து, முன்னாள் வட்டார தலைவர் நீலமேகம், கராத்தே ராஜா, குழந்தை, லோகு, ஜோசப், முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ராஜீவ்காந்தி நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Memorial Day ,Yumupillai ,Rajiv Gandhi ,Gandhi ,Siddhar Temple ,Salem ,Congress party ,Dinakaran ,
× RELATED ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு...