×

நெல் குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத்தொகை தரவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.107, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.82 வீதம் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும். 2024-25ம் கொள்முதல் ஆண்டில் சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2300-ரூ.2350 என்ற அளவில் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் சாகுபடிக்கான செலவுடன் ஒப்பிடும்போது இது போதுமானதல்ல. நடப்பாண்டிலாவது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கொள்முதல் விலை என்ற இலக்கை எட்ட வேண்டுமானால் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.700 ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் தான் உழவர்களின் கண்ணீரை துடைக்க முடியும். தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.700 ஊக்கத்தொகை வழங்குவது சாத்தியமானது தான். எனவே, 2024-25ம் ஆண்டில் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல், சாதாரண ரக நெல் ஆகிய இரண்டுக்கும் குவிண்டாலுக்கு ரூ.700 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

The post நெல் குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத்தொகை தரவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,CHENNAI ,Ramadoss ,BAMA ,Tamil Nadu ,Union Government ,
× RELATED தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை