×

உலக பாரா தடகளம் தங்கம் வென்றார் மாரியப்பன்: முதல்வர் பாராட்டு

சென்னை: உலக பாரா தடகளப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் உயரம் தாண்டுதலில் பங்கேற்ற மாரியப்பன் 1.88 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து அசத்தினார். தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜப்பானில் நடக்கும் உலக பாரா தடகள போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன். இந்த வெற்றியை ஈட்டுதற்காக அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இந்த வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post உலக பாரா தடகளம் தங்கம் வென்றார் மாரியப்பன்: முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Mariyappan ,World Para Athletics ,Chief Minister ,Chennai ,Mariyappan Thangavel ,Tamil Nadu ,World Para Athletics Championships ,2024 World Para Athletics Championship ,Kobe, Japan ,
× RELATED உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!