×

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஈடி ரெய்டு

புதுடெல்லி: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் முன்னாள் செயலாளர் ரமேஷ் அபிஷேக் மீது சிபிஐ பணமோசடி வழக்கு பதிவு செய்தது. பணியில் இருந்தபோது தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனை கட்டணமாக மிகப்பெரிய தொகையை பெற்றதாகவும், ஓய்வு பெற்ற பின்னர் அந்த பணத்தின் மூலமாக தன்னை வளப்படுத்தி கொண்டதாகவும் சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் ரமேஷ் அபிஷேக்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். கிரேட்டர் கைலாஷ் உட்பட டெல்லியின் பல்வேறு இடங்களில் ரமேசுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

The post ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : ED ,IAS ,New Delhi ,CBI ,Department of Industry ,Domestic Trade Development ,Ramesh Abhishek ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு