×

வாக்குப் பதிவில் முறைகேடு பீகாரில் தேர்தலுக்கு பின் பாஜ, ஆர்ஜேடி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவர் பலி, 3 பேர் காயம்

சரண்: பீகாரில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர். பீகாரின் சரண் மக்களவை தொகுதிக்கு 5ம் கட்டமான நேற்று முன்தினம்(மே 20) வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு தற்போதைய பாஜ மக்களவை உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடியும், அவருக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளராக அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் சரண் தொகுதியின் பிகாரி தாக்கூர் சவுக் அருகேவுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாஜ, ராஷ்ட்ரிய ஜனதா உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் சந்தன் யாதவ்(25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாக்குப் பதிவில் முறைகேடு பீகாரில் தேர்தலுக்கு பின் பாஜ, ஆர்ஜேடி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவர் பலி, 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : BJP ,RJD ,Bihar ,Saran ,Charan ,Lok Sabha ,BJP Lok Sabha ,Rajeev Pratap ,Dinakaran ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...