×

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா?. வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Modi ,Tamils ,Puri Jegannathar temple ,Odisha ,Chief Minister MLA K. Stalin ,
× RELATED பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்