×

சிஎஸ்கே அணியின் முதல் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது: சேவாக் பேட்டி

மும்பை: 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போது, ஒவ்வொரு அணியும் தங்கள் பகுதியை சேர்ந்த நட்சத்திர இந்திய வீரரை ”ஐகான் வீரர்” என்ற பெயரில் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என ஒரு விதி இருந்தது. அப்போது சென்னையை சேர்ந்த நட்சத்திர இந்திய வீரர்கள் யாரும் இல்லாததால் சிஎஸ்கே அணி அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. அனைத்து வீரர்களையும் ஏலத்தில் வாங்க வேண்டிய நிலையில் இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக்கை எப்படியாவது தங்கள் அணிக்கு கொண்டு வந்து விட வேண்டும், அவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஆக்கிவிட வேண்டும் என திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இது குறித்து சேவாக் கூறுகையில், ”அப்போது சிஎஸ்கே அணியில் வி.பி.சந்திரசேகர் தான் வீரர்களை தேர்வு செய்தார் அவர் எனக்கு போன் செய்து, `சிஎஸ்கே அணியில் நீங்கள் விளையாட வேண்டும்.

டெல்லி டேர்டெவில்ஸ் உங்களை அவர்களின் ஐகான் வீரராக்க முயற்சி செய்கிறது. அவர்களின் அழைப்பை நீங்கள் ஏற்க வேண்டாம்’ என என்னிடம் கூறினார். ”நான் சரி பார்க்கலாம்” என்று மட்டும் சொன்னேன்” என்றார். இருப்பினும், நான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஒப்பந்தத்தை பெற்று அவர்களின் ஐகான் வீரராக ஆனேன். ஏலத்திற்கு நான் செல்லவில்லை. ஒருவேளை நான் ஏலத்திற்கு சென்று இருந்தால் சிஎஸ்கே அணி என்னை வாங்கி இருக்கும். அவர்கள் அணியின் கேப்டனாகவும் என்னை நியமித்து இருப்பார்கள். ஆனால் அதன் பின் அவர்கள் டோனியை ஏலத்தில் வாங்கியதோடு, அவரை கேப்டன் ஆகவும் ஆக்கினார்கள்” என்றார்.

 

The post சிஎஸ்கே அணியின் முதல் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது: சேவாக் பேட்டி appeared first on Dinakaran.

Tags : CSK ,Sehwag ,MUMBAI ,IPL ,Chennai ,Dinakaran ,
× RELATED பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு...