×

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் வேளாண் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாராமாக அமராவதி ஆற்றுபடுகை விளங்குகிறது. இந்த அமராவதி அணைக்கு நீர் ஆதாரமாக திகழும் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான கேரளா மாநிலத்தில்உள்ள பாம்பாறு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி தேனாறு, சிலந்தி ஆறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் அமராவதி அணையை வந்தடைகின்றன.

இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுக்காவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தி தாள்களில் வந்த செய்தியை அடுத்து தானாக முன்வந்து தென்மண்டல பசுமைத்தீர்பாய நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, சத்யகோபால் அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்டது.

இதனை அடுத்து கேரள அரசுக்கு அணைக்கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என பசுமை தீர்ப்பாயம் கேள்வியெழுப்பியது. அனுமதி பெறப்படவில்லை என்றால் உடனடியாக அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வழக்கறிங்கறிடம் இந்த அணைகட்டப்படுவதால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பன குறித்தும் விளக்கமளிக்குமாறு கூறி இந்த வழக்கு விசாரணையை வெள்ளிகிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

The post சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Environment and National Wildlife Board ,Kerala Government ,Spider River ,Green Tribunal ,Chennai ,Environment and ,National Wildlife Board ,Dinakaran ,
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...