×

தமிழக மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை..!!

சென்னை: ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு, தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்தும் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் சுற்றுலா செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 16.05.2024 முதல் 20.05.2024 முடிய மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழக மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Disaster Management Department ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Government Disaster Management Department ,Tamil ,Nadu ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...