×

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

டெல்லி : சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. அனுமதி பெறவில்லை என்றால் அணை கட்டுவதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் தேவிகுளம் வட்டம் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுகிறது கேரள அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? : கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Spider River ,Green Tribunal ,Kerala Government ,Delhi ,South Zone Green Tribunal ,Dinakaran ,
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை...