×

“எப்படி இருந்த நான்” இப்படி ஆயிட்டேன்..! நவீன வசதிகளுடன் புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு

சென்னை: நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ள புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது. நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் கட்டமைக்க ரூ.823 கோடியை சென்னை மாநகராட்சி ஒதுக்கியது.

நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் வகையில், நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டமைக்கப்படும். ரூ.823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.

தற்போது உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது உள்ள பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்பட உள்ளது.

மாநிலங்களவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு ரூ.200 கோடியை மாநில அரசு வழங்கும் என்றார். மற்ற தொகை தனியார் உதவி, வங்கிகள் உதவியுடன் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட உள்ள நிலையில் இந்த புதிய பேருந்து எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் 4 மாடல்கள் இதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஒன்று தேர்வாகும்.

இது போக அண்ணாநகர் (மேற்கு), கலைஞர் கருணாநிதி (கே.கே.) நகர் மற்றும் மந்தைவெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் டெப்போக்கள் அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்கப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

The post “எப்படி இருந்த நான்” இப்படி ஆயிட்டேன்..! நவீன வசதிகளுடன் புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Broadway bus station ,Chennai ,Dinakaran ,
× RELATED பேருந்திற்காக நின்று கொண்டிருந்த...