×

ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு பா.ஜ.க. நோட்டீஸ்..!!

டெல்லி: ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு விளக்கம் கேட்டு ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் கட்சி நடவடிக்கைகளில் ஜெயந்த் சின்ஹா அதிருப்தி தெரிவித்து வந்தார். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய புகாரில் 2 நாட்களில் பதில் அளிக்குமாறு விளக்கம் கேட்டு ஜெயந்த் சின்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பா.ஜ.க. நிர்வாகியான ஜெயந்த் சின்ஹா, மக்களவை தேர்தலில் வாக்கையும் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

The post ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு பா.ஜ.க. நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Union ,Minister ,Jayant Sinha J. K. ,Delhi ,Union Minister ,Jayant Sinha ,Jharkhand ,J. K. ,Hazaribagh ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும்...