×

நெல்லை மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

நெல்லை மாவட்டத்தில் 4-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. சுமார் 10,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை; 1,500 நாட்டு படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி உள்ளிட்ட கிராமங்களில் படகு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Paddy ,Nellai district ,Gulf of Mannar ,Kumari Sea ,Dinakaran ,
× RELATED மன்னார் வளைகுடா, வங்கக் கடல்...