×

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதைதொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக இன்று பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகர், பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், நீல முரளி ஆகியோர் இன்று ஆஜராகவில்லை. விசாரணைக்கு இன்று ஆஜராக முடியாது என்று வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்ததாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,CBCID ,Chennai ,J. K. ,Tambaram Railway Station ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பணம்...