×

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்

 

துவரங்குறிச்சி, மே 21: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தெத்தூர், மருதம்பட்டி, உசிலம்பட்டி, செல்லக்கூடிய தெத்தூர் விளக்கு பகுதி உள்ளது. இப்பகுதி திருச்சி மாவட்டத்தின் கடைசி எல்லையாகும். இங்கு அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் தண்ணீர் வடியாமல் தெத்தூர் செல்லும் சாலை தாழ்வான பகுதி என்பதால் அங்கு மழைநீர் குளம்போல் தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள் மழைநீரில் கடந்து செல்லும்போது சாலை எது, பள்ளம் எது என்று தெரியாமலேயே வாகனத்தை இயக்குகின்றனர். அதனால் அப்பகுதியில் நடந்து செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தேங்கியுள்ள பள்ளத்தில் நடந்து செல்கின்றனர். நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அதிகாரிகள் உடனே அப்பகுதியில் மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Duwarankurichi ,Thettur ,Maruthampatti ,Usilambatti ,Trichy-Madurai National Highway ,Duvarankurichi ,Trichy district ,Dwarangurichi ,Dinakaran ,
× RELATED 20 வயது இளம்பெண்ணுடன் 56 வயது பஸ் டிரைவர்...