×

ஒட்டன்சத்திரத்தில் கோடை மழையால் சாலையில் நீர்த்தேக்கம்: நகராட்சி ஆணையர் ஆய்வு

 

ஒட்டன்சத்திரம், மே 21: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பேருந்துநிலையம், திண்டுக்கல் – பழநி சாலை பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. பேருந்து நிலைய பகுதியில் தேங்கிய மழைநீர் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை, நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக மழைநீரை வெளியேற்றவும், பேருந்து நிலையம் பகுதிகளை சுத்தம் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

The post ஒட்டன்சத்திரத்தில் கோடை மழையால் சாலையில் நீர்த்தேக்கம்: நகராட்சி ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ottanchatra ,Ottenchatram ,Dindigul district ,Otanchatram ,Dindigul ,Palani ,Otanchatra ,Dinakaran ,
× RELATED சேதமடைந்து காணப்படும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: மக்கள் கோரிக்கை