×

₹1.74 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ஆத்தூர், மே 21:ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 1,710 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ₹16,869க்கும், அதிகபட்சமாக ₹21,539க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக ₹15,156க்கும், அதிகபட்சமாக ₹17,499க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குறைந்தபட்சம் ₹22,569க்கும், அதிகபட்சமாக ₹27,369க்கும் விலை போனது. 1710 மஞ்சள் மூட்டைகள் ₹1 கோடியே 74 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தைக் காட்டிலும் மஞ்சள் வரத்து குவிண்டாலுக்கு ₹1000 வரை கூடுதலாக கிடைத்தது.

The post ₹1.74 கோடிக்கு மஞ்சள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Athur ,Athur Puduppet Primary Agricultural Producers Cooperative Marketing Society ,Dinakaran ,
× RELATED செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்