×

குப்பைக்கழிவால் துர்நாற்றம்

சேலம், மே 21: சேலம் பால் மார்க்கெட் காய்கறிக்கடை வளாகத்தில் பல நாட்களாக தேங்கி நிற்கும் குப்பைகழிவுகள் அகற்றாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்தனர். சேலம் செவ்வாய்பேட்டையில் பால்மார்க்கெட் பகுதி உள்ளது. இப்பகுதியில் மளிகைப்பொருட்கள் மொத்த வியாபாரிகள் கடைகள், காய்கறிக்கடைகள் உள்பட பல கடைகள் உள்ளன. தினசரி இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதே போல், வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். பால் மார்க்கெட்டில் நூற்றுக்கணக்கான காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் பல டன் கணக்கில் காய்கறிகள் விற்பனை நடக்கிறது. இந்த கடைகளில் கழிக்கப்படும் காய்கறி கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த கழிவுகள் அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக அங்கு சேரும் குப்பைக்கழிவுகள் அகற்றப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக குப்பைக்கழிவுகள் அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த குப்பைக்கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குப்பைக்கழிவால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Sewwaipettai ,Dinakaran ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...