×

பழைய விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை

நாமக்கல், மே 21: பரமத்திவேலூர் வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அங்குள்ள புகார் பெட்டியில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் புதிய சட்டத்தால், வாகனம் விற்பனை செய்யும் தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. எனவே. புதிய விதிகளை மாற்றி, மீண்டும் பழைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வாகனத்தின் பதிவு சான்றிதழை பெயர் மாற்றம் செய்ய முன்னாள் உரிமையாளர் ஓடிபி அனுப்புதல் மற்றும் அவருடைய ஆதார் அட்டை சமர்பித்தல் முறையை ரத்து செய்ய வேண்டும். வாகனத்தின் பதிவு சான்றிதழை தபால் வழியாக அனுப்பும் முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post பழைய விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Consultant Welfare Association ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு...