×

சொகுசு காரில் வந்து வீட்டில் ஆடுகள் திருட்டு: வீடியோ வைரல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்த சண்முகபாண்டியன் வீட்டில் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த ஆடுகள் நேற்றுமுன்தினம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இது குறித்து சண்முகபாண்டியன் வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் தெற்கு பொய்கைநல்லூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலையில் சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள், சண்முகபாண்டியன் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் காரை நிறுத்துகின்றனர். பின்னர் அதில் இருந்து இறங்கிய 3மர்ம நபர்களில் ஒருவர், யாரும் இல்ல… சீக்கிரம் வாங்க வாங்க… என அழைக்க வீட்டிற்குள்ளே சென்று 3 ஆடுகளை அவிழ்த்து தூக்கிக் கொண்டு சீக்கிரம் ஏத்து.. சீக்கிரம் ஏத்து என காரில் ஏற்றி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. பதிவெண்களை வைத்து எந்த மாவட்டத்தை சேர்ந்த கார் என்றும், மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post சொகுசு காரில் வந்து வீட்டில் ஆடுகள் திருட்டு: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Shanmugapandian ,Nallur ,South Poigai ,Velankanni ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...