×

கோைவ வடிகால் வசதி செய்து தர கோரிக்கை அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக பொய்யான தகவல் பரப்புகிறார்கள்

கோவை, மே 21: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளது. கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்ககோரி மாவட்ட கலெக்டரிடம் அதிமுக எம்எல்ஏ.கள் எல்லோரும் சேர்ந்து மனு அளித்துள்ளோம். பில்லூர் 3வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால், கோவையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் இருப்பதாக, எதிர்கட்சியினர் தவறான தகவலை பரப்புகிறார்கள். ஊடகங்கள் கற்பனையாக செய்தி வெளியிடுகின்றன. சமூக வலைதளங்களிலும் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. கட்சிக்குள் எந்த பிரச்னை வந்தாலும், மூத்த நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த பின்னரே எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்கிறார். அதிமுக தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

The post கோைவ வடிகால் வசதி செய்து தர கோரிக்கை அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக பொய்யான தகவல் பரப்புகிறார்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Coimbatore ,Former ,minister ,SB Velumani ,Tamil Nadu ,Coimbatore district ,District Collector ,Dinakaran ,
× RELATED அதிமுக தலைமைக்கு தகுதியற்றவர்...