×

ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 11.25 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ரவி, நாளை இரவு 8.15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். ஆளுநர் ரவியின் இந்த டெல்லி பயணம், அவருடைய சொந்த பயணம் என்றும், வேறு முக்கியத்துவம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

The post ஆளுநர் திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Governor RN ,Ravi ,Vistara Airlines ,
× RELATED வெயிலில் வேலை பார்க்கும்...