×

பிரிமியர் லீக் கால்பந்து தொடர்ந்து 4வது முறையாக மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்

மான்செஸ்டர்: கிரேட் பிரிட்டனில் நடந்த இங்லிஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ந்து 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மான்செஸ்டர், இட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற பரபரப்பான பைனலில் வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியுடன் மோதிய மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. கடந்த 7 சீசனில் அந்த அணி வென்ற 6வது சாம்பியன் பட்டம் இது. தொடர்ச்சியாக 35 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணியாகவும் மான்செஸ்டர் சிட்டி அசத்தியுள்ளது.

The post பிரிமியர் லீக் கால்பந்து தொடர்ந்து 4வது முறையாக மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Manchester City ,Premier League ,Manchester ,English Premier League ,Great Britain ,Premier League Football ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான போட்டிகளில்...