×

துளிகள்

* அமெரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி டி20 தொடரில் (3 போட்டி) விளையாடுகிறது. இப்போட்டிகள் ஹூஸ்டனில் மே 21, 23, 25 தேதிகளில் நடைபெற உள்ளன. இரு நாடுகளும் முதல்முறையாக சர்வதேச தொடரில் சந்திக்க உள்ளன.

* மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அஷ்மிதா சாலிஹா, உன்னதி ஹூடா, ஆகர்ஷி காஷ்யப், இரட்டையர் பிரிவில் த்ரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ் மட்டுமே களமிறங்குகிறார். நடப்பு சாம்பியன் எச்.எஸ்.பிரணாய் பங்கேற்கவில்லை.

The post துளிகள் appeared first on Dinakaran.

Tags : Drops ,Bangladesh ,USA ,T20 ,Houston ,Malaysia Masters Badminton… ,Dinakaran ,
× RELATED முதல் டி20 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது அமெரிக்கா