×

சட்டீஸ்கரில் பயங்கரம் மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி

காவர்தா: சட்டீஸ்கரில் மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 17 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். சட்டீஸ்கர் மாநிலம், கபீர்தாம் மாவட்டம் குக்குடூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காடுகளில் டெண்டு இலை பறிக்கும் பழங்குடியின தொழிலாளர்கள் வேலை முடிந்து மினி வேனில் நேற்று திரும்பி கொண்டிருந்தனர். பஹ்பானி கிராமத்துக்கு அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 17 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். மினி வேனில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியது தான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. முதல்வர் விஷ்ணுதியோ சாய் விபத்தில் பலியான குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

The post சட்டீஸ்கரில் பயங்கரம் மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Kawartha ,Kukudur Police Station ,Kabirdham District, Chhattisgarh ,
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!