×

அகமதாபாத் ஏர்போர்ட்டில் 4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது: இலங்கையை சேர்ந்தவர்கள்

அகமதாபாத்: குஜராத்தில் இலங்கையை சேர்ந்த 4 ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இலங்கையை சேர்ந்த 4 பேர் நேற்று விமானத்தில் வந்தனர். விமான நிலையத்தில் நீண்ட நேரமாக நின்றிருந்த 4 பேரின் நடவடிக்கைகளும் சந்தேகத்திற்கு இடமாக இருந்தன. இதையடுத்து அவர்களை பிடித்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர்(ஏடிஎஸ்) விசாரித்தனர். இதில், 4 பேரும் ஐஎஸ் தீவிரவாதிகள் என தெரியவந்தது. இதன் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என குஜராத் போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளின் வீரர்கள் நேற்று அகமதாபாத்துக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு குறித்த நால்வரும் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராஜ்கோட்டில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய 3 பேரை ஏடிஎஸ் படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

The post அகமதாபாத் ஏர்போர்ட்டில் 4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது: இலங்கையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Ahmedabad Airport ,AHMEDABAD ,Gujarat Anti Terrorism Squad ,IS ,Sri Lanka ,Gujarat ,Ahmedabad, Gujarat ,ISIS ,Dinakaran ,
× RELATED ரூ.2.5 கோடி ஹெராயின் கடத்திய ஆப்கன் ஆசாமி டெல்லியில் கைது