×

மூளைச்சாவு பட்டதாரி பெண் உறுப்புகள் தானம்

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எழில் நகரை சேர்ந்தவர் டி.சசிகுமார். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி எஸ்.சத்யா(42). முதுகலை பட்டதாரி. ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் கடந்த 16ம் தேதி தவறி விழுந்து தலையில் காயமடைந்தார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் 17ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் உறவினர்களின் ஒப்புதலுடன் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட இதயம், நுரையீரல், சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், ஒரு சிறுநீரகம் சிஎம்சிக்கும், ஒரு சிறுநீரகம் தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் சிஎம்சிக்கும் வழங்கப்பட்டது.

The post மூளைச்சாவு பட்டதாரி பெண் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,D. Sasikumar ,Eghil Nagar ,Kudiatham ,S. Sathya ,Vellore… ,
× RELATED ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது