×

தபால் ஓட்டு கேட்டு 78 வயது மூதாட்டி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 78வயது மூதாட்டி தரப்பில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு உடல்நிலை மோசமான சூழலில் உள்ளது. படுத்தப்படுக்கையாக இருக்கிறேன். எழுந்து நடக்கக்கூட முடியாது. எனவே தனது வாக்கினை தபால் மூலமாக செலுத்த அனுமதித்து தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’ என்று கேட்டு இருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் விசாரித்து கூறும்போது,’ 80 வயதிற்கு குறைவாக இருப்பவர்களுக்கு உரிய காரணங்கள் இல்லாமல் தபால் வாக்குகள் கிடையாது என்ற நடைமுறையையும் தேர்தல் நடத்தும் அதிகாரி பின்பற்றி இருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியது எதுவும் இல்லை’ என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post தபால் ஓட்டு கேட்டு 78 வயது மூதாட்டி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...