×

தலாய்லாமா குறித்து சர்ச்சை கருத்து நடிகை கங்கனாவுக்கு கருப்புக்கொடி

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜ வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகின்றார். நேற்று லாஹவுல் மற்றும் ஸ்பிடி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது உள்ளூர் மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கங்கனாவிற்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கங்கனாவுடன் சென்றிருந்த சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் கூறுகையில், பேரணி நடத்துவதற்காக பாஜவுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் போராட்டம் வருத்தமளிக்கிறது. பாஜ தேர்தல் பிரசார கூட்டத்துக்கு காங்கிரஸ் இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

பிரசாரம் முடிந்து திரும்பும்போது வாகனங்களின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இது காங்கிரசின் விரக்தியை காட்டுகின்றது என்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திபெத் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, அமெரிக்க அதிபர் ஜோ பிடென் குறித்து கங்கனா டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு புத்த மத துறவிகள் எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள அவரது அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் வேட்பாளராக களமிறங்கி பிரசாரத்துக்கு வந்த கங்கனாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டப்பட்டது. இதுகுறித்து பா.ஜவினர் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.

The post தலாய்லாமா குறித்து சர்ச்சை கருத்து நடிகை கங்கனாவுக்கு கருப்புக்கொடி appeared first on Dinakaran.

Tags : Dalai Lama ,Kangana ,Bollywood ,Kangana Ranaut ,BJP ,Mandi ,Himachal Pradesh ,Lahaul ,Spidi ,Congress ,
× RELATED பிரதமர் மோடி இந்தி தெரியாத இத்தாலியர் இல்லை: நடிகை கங்கனா பிரசாரம்