×

மோடி தலைமையில் வாரணாசியில் இன்று பெண்கள் மாநாடு

வாரணாசி: வாரணாசியில் இன்று 25,000 பெண்கள் பங்கேற்கும் பெண்கள் சக்தி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி உபி மாநிலம் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் 1ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் போட்டியிடுகிறார். இந்நிலையில்,வாரணாசி சம்பூர்ணானந்த் பல்கலைகழகத்தில் இன்று 25 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் சக்தி மாநாடு நடக்கிறது. இதில் மோடி பங்கேற்கிறார்.

The post மோடி தலைமையில் வாரணாசியில் இன்று பெண்கள் மாநாடு appeared first on Dinakaran.

Tags : Women's conference ,Varanasi ,Modi ,Women's Shakti Conference ,UP ,Dinakaran ,
× RELATED உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு