×

யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்சுக்கு ஒரு நாள் கஸ்டடி

திருச்சி: யூடியூபர் சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இதை வெளியிட்டதாக யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் நேற்று நடந்தது. ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, நாளை (இன்று) அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

The post யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்சுக்கு ஒரு நாள் கஸ்டடி appeared first on Dinakaran.

Tags : YouTube ,Felix ,Trichy ,Shankar ,Felix Gerald ,Central Jail ,Dinakaran ,
× RELATED பெலிக்சிடம் போலீஸ் காவலில் விசாரணை