×

பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…

நன்றி குங்குமம் தோழி

*பிஸ்தா பருப்பு இந்தியாவில் எங்கும் பயிரிடப்படுவதில்லை.

*நாம் சாப்பிடுவதெல்லாம் அமெரிக்காவில் விளைவிக்கப்படும் பிஸ்தா பருப்புகள்தான்.

*துருக்கி போன்ற சிலநாடுகளில் உணவுகளில் பிஸ்தாவை சேர்க்கிறார்கள்.

*இந்தியாவில் பெரும்பாலும் அழகு சாதனப் பொருட்களில் பிஸ்தா பருப்பு பயன்படுத்தப்படுகிறது.

*இதில் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.

*தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வையை உறுதி செய்யும். அதே சமயம் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.

*உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் தினமும் சிறிதளவு பிஸ்தா பருப்பினை சாப்பிடலாம்.

*இதில் நார்ச்சத்து அதிகம், என்பதால், செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு குடல் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமையை தோற்றி வைக்கும்.

*வைட்டமின் இ உள்ளதால் சூரியக் கதிர்களால் வரும் தோல் பாதிப்பை தடுக்கும்.

– ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரூ.

The post பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்… appeared first on Dinakaran.

Tags : kumkum ,India ,America ,Turkey ,
× RELATED தைராய்டு பிரச்னைகளும் தீர்வும்!