×

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்; புரசைவாக்கத்தில் நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை: தலைமறைவான 6 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு


சென்னை: மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரமடைந்த ரவுடி தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய வாலிபரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார். தலைமறைவாக உள்ள ரவுடி உட்பட 6 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை புரசைவாக்கம் சாலைமா நகரை சேர்ந்தவர் கருப்பு தினேஷ்(26). இவர் வாட்டர் வாஷ் கடையில் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று இரவு தனது நண்பரான வேப்பேரி காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி கார்த்திக்(எ)சொட்ட கார்த்திக் மற்றும் ஆகாஷ் ஆகியோருடன் புரசைவாக்கம் சண்முகராயன் நடைபாதையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்தி கொண்டிருந்த கருப்பு தினேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று ஓட ஓட வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது நண்பர்களான சொட்ட கார்த்திக் மற்றும் ஆகாஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தினேஷை மீட்டு ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தினேஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தினேஷ் தாய் ஈஸ்வரி அளித்த புகாரின் படி வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இமான்(எ)இமானுவேல்(25) என தெரியவந்தது. இமானுவேல் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இமான் (எ)இமானுவேல் மனைவியுடன் உயிரிழந்த தினேஷ் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷிடம் இமானுவேல் பல முறை எச்சரித்தும் அவர் தொடர்ந்த இமானுவேல் மனைவியுடமான கள்ளக்காதலை கைவிடாததால் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து தினேஷை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இமான்(எ)இமானுவேல் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் உட்பட 6 பேரை தனிப்பைட அமைத்து தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் புரசைவாக்கம் பகுதியில் வாலிபர் ஒருவர் கள்ளக்காதல் விவகாரத்தில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்; புரசைவாக்கத்தில் நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை: தலைமறைவான 6 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Purasaivakam ,CHENNAI ,Purasaivakkam ,Saalima Nagari ,
× RELATED பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த...