×

செங்கல்பட்டில் பரபரப்பு: காதல் தோல்வியால் இளம்பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வந்தவாசி சத்தியவாடி பகுதியை சேர்ந்தவர்கள் நாராயணன் மகள்கள் ரஞ்சிதா (20), ஷர்மிளா (24). இவர்கள் இருவரும் செங்கல்பட்டு நகராட்சி கோகுலாபுரம் கம்பர் தெருவில் வாடகைக்கு வீட்டில் வசிக்கின்றனர். மகேந்திராசிட்டியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஷர்மிளாவுக்கு மதிய ஷிப்ட் என்பதால் வேலைக்கு சென்று விட்டார். ரஞ்சிதா மட்டும், அறையில் தனியாக இருந்தார். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு ஷர்மிளா போன் செய்தார். எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் எடுக்காததால் மதுராந்தகத்தில் உள்ள உறவினர் விஜி என்பவருக்கு போன் செய்து நேரில் வந்து பார்க்கும்படி கூறியுள்ளார். உடனே அவரும் ரஞ்சிதா தங்கியிருந்த வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்.

திறக்கப்படவில்லை. உடனே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். மின்விசிறியில் ரஞ்சிதா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வழக்கு பதிவு செய்து அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். காதல் தோல்வியால் ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கம்பெனியில் ஏதாவது பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டில் பரபரப்பு: காதல் தோல்வியால் இளம்பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sengalbat ,Chengalpattu ,Narayanan ,Ranjitha ,Sharmila ,Vandavasi Sathyawadi ,Gokulapuram Gambar Street, Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை