×

போதைப்பொருள் விற்பனை: மாடல் அழகி உள்பட 6 பேர் அதிரடி கைது


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் லாட்ஜில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மாடல் அழகி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் கருகப்பள்ளி என்ற பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக எளமக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அங்குள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கும்பல் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ஒரு அறையில் நடத்திய சோதனையில் கொகைன், கஞ்சா, மெத் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அந்த அறையில் இருந்த அல்கா போனி (22), ஆஷிக் அன்சாரி (22), சூரஜ் (26), ரஞ்சித் (24) மற்றும் 18 வயதுடைய 2 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் அல்கா போனி மாடல் அழகியாக உள்ளார். இவர் ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்து உள்ளார். இந்தக் கும்பல் பெங்களூருவிலிருந்து போதைப்பொருளை வாங்கி லாட்ஜில் வைத்து விற்பனை செய்து வந்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ரஞ்சித் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 4 கிரிமினல் வழக்குகளும், சூரஜ் மீது 4 திருட்டு வழக்குகளும் உள்ளன. விசாரணைக்குப் பின் 6 பேரையும் போலீசார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போதைப்பொருள் விற்பனை: மாடல் அழகி உள்பட 6 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kochi, Kerala ,Elamakkara ,Karakapalli ,Kerala state ,Kochi ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில்...