×

மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு: கொன்று எரிக்கப்பட்டாரா?


புதுக்கோட்டை: விராலிமலை அருகே மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் கொன்று எரித்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி மோனிகா(24). திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்த மோனிகாவை திடீரென காணவில்லை. உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மோனிகாவின் தாய் அஞ்சம்மாள் விராலிமலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோனிகாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கவரப்பட்டியில் உள்ள தொப்பன் குளத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் எரிந்த நிலையில் கிடந்தது மாயமான மோனிகாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து மோனிகா எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். ேமானிகாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ தெய்வநாயகியும் விசாரணை நடத்தி வருகிறார்.

The post மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு: கொன்று எரிக்கப்பட்டாரா? appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Viralimalai ,Vetrivel ,Kavarapatti ,Pudukottai district ,Monica ,
× RELATED விராலிமலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்