×

டெல்லியின் சிறிய கடையில் சென்னா மசாலா பூரி சாப்பிட்ட ராகுல்: தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்


புதுடெல்லி: டெல்லியின் சிறிய கடையில் சென்னா மசாலாவுடன் கூடிய பூரி சாப்பிட்ட ராகுலின் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரசாரம் முடிந்ததும் ஒரு கடையில் சோலே-பத்துரா (சென்னா மசாலாவுடன் கூடிய பூரி) சாப்பிட வந்தார். அப்போது, அவரிடம் அங்கிருந்த சிலர் ஜாலியாக பேசினர். அப்போது ஒருவர், ‘டெல்லியில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? என்று கேட்டார். அதற்கு ராகுல், ‘வரலாற்று சின்னங்கள் பிடிக்கும்’ என்றார்.

பின்னர், ​இன்று உடலுக்கு ஒத்துவராத உணவை உண்ண முடிவு செய்துள்ளேன் என கேலியாக கூறினார். இவ்வாறாக ராகுல்காந்தியின் உரையாடல் இருந்தது. இதுதொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில், இதற்கு முன்பே, டெல்லியில் உள்ள பெங்காலி மார்க்கெட், ஜமா மஸ்ஜித் பகுதிக்கும் ராகுல் காந்தி திடீரென வந்து மக்களுடன் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லியின் சிறிய கடையில் சென்னா மசாலா பூரி சாப்பிட்ட ராகுல்: தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Senna Masala Puri ,Delhi ,New Delhi ,Congress party ,Former ,Congress ,president ,Rahul Gandhi ,India ,Ramlila Maidan ,
× RELATED தங்களின் நாற்காலியை காப்பாற்றும்...