×

கடின உழைப்புக்கான பலன்: விராட் கோலி நெகிழ்ச்சி

பெங்களூர்: 2024 ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல 0.2 சதவிகிதமே வாய்ப்புகள் இருந்த போதும், எந்தவித அச்சமும் இல்லாமல் ஆர்சிபி அணி விடாமுயற்சி, நம்பிக்கையுடன் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சீசனில் ஆர்சிபி அணியின் விராட் கோலி 14 போட்டிகளில் ஆடி 708 ரன்களை விளாசி இருக்கிறார். ஒவ்வொரு பவுண்டரிக்கும், சிக்சருக்கும் உற்சாகமான விராட் கோஹ்லி, ஒவ்வொரு விக்கெட்டையும் வெற்றியை போல் கொண்டாடி தீர்த்தார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், “நீங்கள் செய்யும் செயலுக்கு நேர்மையாக இருந்தாலே போதும். கடவுளிடம் ஒரு திட்டம் எப்போதும் இருக்கும். நாங்கள் நேர்மையாக விளையாடி கடின உழைப்பை கொடுத்துள்ளோம். அதன் பலனையும் அறுவடை செய்துள்ளோம். இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் எந்த வார்த்தையும் கிடையாது. ஏனென்றால் அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது’’ என்றார்.

The post கடின உழைப்புக்கான பலன்: விராட் கோலி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Bangalore ,IPL series ,RCB ,Dinakaran ,
× RELATED விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது...