×

அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாதிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு: பஞ்சாப் தேர்தலில் போட்டி


அமிர்தசரஸ்: அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாதிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுகிறார். பஞ்சாபில் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ம் தேதி 7ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாபின் கதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியும், வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் வேட்பு மனு தாக்கல் ெசய்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அசாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங்கின் சார்பில் கடந்த 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அவரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதால், அவர் கதூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கதூர் சாஹிப் தொகுதியில் கடந்த 2019ல் காங்கிரஸின் ஜஸ்பிர் சிங் கில் வென்றார். தற்போது காங்கிரஸ் சார்பில் குல்தீப் சிங் ஜிரா போட்டியிடுகிறார். அதேசமயம் பாஜக சார்பில் மஞ்சித் சிங் மன்னாவும், ஆம் ஆத்மி சார்பில் லால்ஜித் சிங் புல்லரும், அகாலி தளம் சார்பில் விர்சா சிங் வால்டோஹாவும் போட்டியிடுகின்றனர். கதூர் சாஹிப் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் அம்ரித்பால் சிங்குக்கு, ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. 13 தொகுதிகளில் போட்டியிடும் 328 வேட்பாளர்களில் 169 சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் அம்ரித்பால் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாதிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு: பஞ்சாப் தேர்தலில் போட்டி appeared first on Dinakaran.

Tags : Mike ,Assam ,Punjab ,AMRITSAR ,Punjab elections ,Lok Sabha ,Khadoor Sahib ,in Punjab ,Dinakaran ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...