×

ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி அன்னூர் சொக்கம் பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் வீட்டில் ரூ.1.5 கோடி பணம், 9 பவுன் தங்க நகைகளும் கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனை அடுத்து போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், சிசிடிவி கேமரா, வழித்தடம் உள்ளிட்டவற்றை சோதனை செய்த போது சோமனூரில் தங்கி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் அங்கு தங்கி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ரூ.18 லட்சம் மட்டுமே கொள்ளை அடித்ததாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விஜயகுமாரிடம் சோதனை நடத்தினர். அதில் அவர் ரூ.18 லட்சம் கொள்ளை போனதை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இன்று கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பொய் தகவல் அளித்த விஜயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

The post ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Annoor BJP ,Vijayakumar ,Coimbatore ,Annoor ,BJP ,Annoor Sokkam Palayam ,
× RELATED அன்னூர் அருகே பாஜக பிரமுகர்...