×

வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை: வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் மே 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இந்நிலையில், தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.55, 200க்கும், கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,900-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 20 நாட்களில் கிராமுக்கு ரூ.14.50 உயர்ந்துள்ளது. கடந்த 20 நாட்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.265 உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,635-ஆகவும் வெள்ளி ரூ.86.50 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

The post வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை: வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Shavran ,Chennai ,Dinakaran ,
× RELATED மூன்றாவது நாளாக ஏற்றத்தில் தங்கம்...