×

திருவாடானை அருகே அமல அன்னை ஆலய விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவாடானை, மே 20: திருவாடானை அருகே திருவடிமிதியூர் கிராமத்தில் அமல அன்னை ஆலய உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஆலய பங்கு தந்தை சேவியர் சத்தியமூர்த்தி அமல அன்னை ஆலய கொடியினை அர்ச்சிப்பு செய்தார். தொடர்ந்து உயர்ந்த கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது, வருகிற 25ம் தேதி சிறப்பு சப்பர பவனியும், வான வேடிக்கையும், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்று நிகழ்வில் இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post திருவாடானை அருகே அமல அன்னை ஆலய விழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Amala Anai Temple festival ,Thiruvadanai ,Amala Annai temple ,Thiruvadimithiyur ,Saviyar Sathyamurthy ,Amala Anai ,temple ,Thiruvadan ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...