×

கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு இரண்டு வாலிபர்கள் கைது

 

ராமநாதபுரம், மே 20: ராமநாதபுரம் அருகே தாயுடன் பழக்கம் இருந்ததால் கொத்தனாரை வெட்டிய பெண்ணின் மகன்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், இழுப்பைக்குளத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் பெரியசாமி(26), இவர், ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடன் மானாமதுரையை சேர்ந்த முருகன் மனைவி லட்சுமி(50) சித்தாள் வேலை செய்து வந்தார். இதில் பெரியசாமியுடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு பெரியசாமியும், அவரின் கட்டிட மேஸ்திரி கருப்பு என்பவரும் ராமநாதபுரம் பாரதி நகர் டிபிளாக் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்க வந்த லட்சுமியின் மகன்கள் வல்லரசு (28), ராஜபாண்டி (21) ஆகியோர் பெரியசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென மறைத்து வைத்திருந்த அறிவாளால் பெரியசாமியை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லரசு, ராஜபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

The post கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு இரண்டு வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Chinnathambi ,Periyasamy ,Ilubaikulam, Virudhunagar district ,Beravoor ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’