×

குளிர்வித்த கோடை மழை

 

ஆர்.எஸ்.மங்கலம். மே 20: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதில் அக்கினி நட்சத்திரம் ஆரம்பம் ஆன பிறகு கோடை வெப்பம் தாங்க முடியாமல் பகலில் வெளியே வருவதற்கே அஞ்சி பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

இருந்தாலும் நாளுக்கு நாள் அக்கினி கோடை வெயில் அதிகரித்தது. இதனால் வீடுகளில் கூட இருக்க முடியாமலும் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது உப்பூர், திருப்பாலைக்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு சிறு மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலால் ஏற்பட்ட வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post குளிர்வித்த கோடை மழை appeared first on Dinakaran.

Tags : RS ,RS Mangalam ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி