×

பாம்பு கடித்து கூலி தொழிலாளியின் மகன் சாவு

 

திருவெண்ணெய் நல்லூர், மே 20: திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராமத்தை சேர்ந்த மருதமலை. கூலி தொழிலாளி. இவரது மகன் அய்யனார்(15). 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை தனது கூரை வீட்டில் படுத்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து விட்டதாக கூறினார். உடனே அவரது உறவினர் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போது வரும் வழியில் வாந்தி மயக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

The post பாம்பு கடித்து கூலி தொழிலாளியின் மகன் சாவு appeared first on Dinakaran.

Tags : Laborer ,Tiruvenney Nallur ,Marudamalai ,Karuvepilai Palayam village ,Ayyanar ,
× RELATED தொடர் சிகிச்சையால் காட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம்