×

மனைவியை தாக்கி கொலை மிரட்டல்

 

விருத்தாசலம், மே 20: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (47). இவரது மனைவி ஜான்சி(43). இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கோபி வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டு, ஜான்சி மற்றும் பிள்ளைகளை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக கோபி, மஞ்சுளா மற்றும் அவரது கணவர் தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேர் சேர்ந்து ஜான்சியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஜான்சி பெண்ணாடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கோபி உள்பட 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியை தாக்கி கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Vrudhachalam ,Gopi ,Adhamangalam ,Pannadam ,Jhansi ,
× RELATED பணம் தந்தால்தான் திறப்பு...