×

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

 

நெல்லிக்குப்பம், மே 20: பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வசந்த் (36). இவர் தனது பைக்கில் மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, 4 நபர்கள் அவரை வழிமறித்து அவர் பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பணத்தை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக காவல் நிலையத்தில் வசந்த் புகார் செய்தார்.

அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு மறைந்திருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதை தொடர்ந்து மேல்பட்டாம்பாக்கம் பி. என். பாளையம் காத்தவராயன் கோயில் தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் ஷேக் (எ) ஜெய் கணேஷ் (26) மற்றும் முகிலன், ராஜேஷ், தினேஷ் குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஷேக் (எ) ஜெய்கணேஷ் மீது நெல்லிக்குப்பம், பண்ருட்டி, காடாம்புலியூர், திருச்சி ராம்ஜி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8 திருட்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் ஷேக் (எ) ஜெய்கணேஷ் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Vasant ,Kanishappakkam ,Panruti ,Melpatambakkam ,Dinakaran ,
× RELATED முள்ளிகிராம்பட்டில் குளத்தை...