×

கோடை மழை காரணமாக புழல் ஏரி நீர்வரத்து 318 அடியாக உயர்வு

 

புழல், மே 20: கோடை மழை காரணமாக புழல் ஏரி நீர்வரத்து 318 அடியாக உயர்ந்துள்ளது. செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மிதமான கோடை மழை பெய்தது. இதில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 1 செ.மீ மழை பதிவானது. கோடை மழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 215 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 318 கனஅடியாக உயர்ந்தது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,868 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 19.28 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக புழல் ஏரி 86.91 சதவீதம் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

The post கோடை மழை காரணமாக புழல் ஏரி நீர்வரத்து 318 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Puzhal lake ,Puzhal ,Sengunram ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்