×

ராமர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கரூர், மே 20: ராமர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் கரூர் உட்கோட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கில். இறந்து போன ராமர் என்பவரின் வழக்கில் தொடர்புடைய எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் எதிரிகளான, தனுஷ், ரமேஷ், தர்மா ஆகியோர் மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது வரை இந்த வழக்கில், தொடர்புடைய ஐந்து பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், நடந்து கொள்பவர்கள் மீதும், பொது அமைதி சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post ராமர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Ram ,Karur ,Karur District SP ,Aravakurichi Police Station ,Karur Utkotam ,Karur district ,Dinakaran ,
× RELATED ராம் பொதினேனி ஜோடியாக காவ்யா தாப்பர்